டித்வா புயலையடுத்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் மத்திய மாகாணம் பேரிழப்பை சந்தித்துள்ளது. உயிரிழப்பு மற்றும் உடமை இழப்பு என்பன இம்மாகாணத்திலேயே அதிகளவு இடம்பெற்றுள்ளன.
இலங்கையில் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதே மத்திய மாகாணமாகும்.
கண்டி மாவட்டத்தில் 234 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர், மாத்தளை மாவட்டத்தில் 28 பேர் என பேரிடரால் மத்திய மாகாணத்தில் 351 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்படி மூன்று மாவட்டங்களிலும் மொத்தமாக 128 பேர் காணாமல்போயுள்ளனர்.
நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 2 ஆயிரத்து 537 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
அதேவேளை, மத்திய மாகாணத்தில் பாரிய வீதிகள், ரயில் பாதைகள் மற்றும் பாலங்கள் என்பனவும் சேதமடைந்துள்ளன. விவசாய நிலங்களும் அழிவடைந்துள்ளன.










