மத்திய வங்கியின் பணம் அனுப்பும் செயற்பாட்டிற்கு ஆதரவளிக்கும் Lanka Remit உடன் கூட்டிணைகிறது HNB

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, இலங்கை மத்திய வங்கியால் (CBSL) வெளிநாட்டிலிருந்து உள்நோக்கி பணம் அனுப்புவதற்கான முறையான வழிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Lanka Remit’ மொபைல் செயலியின் (App) பங்காளியாக கையொப்பமிட்டுள்ளது.

National Remittance Mobile Application, வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு, பாதுகாப்பான, வசதியான, மற்றும் செலவு குறைந்த முறைகளை வழங்கும் முறையான பணம் அனுப்பும் செயற்பாடுகளுக்கு நேரடி அணுகலை வழங்குகிறது.

நிதி அமைச்சு, வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் ஆதரவுடன் இந்த செயலி (App) இளைஞர் மற்றும் விளையாட்டு, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்டது.

“வெளிநாட்டில் பணிபுரியும் ஒவ்வொரு இலங்கையர்களுக்கும் நாங்கள் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். CBSL மற்றும் அரசாங்கம் இந்த நபர்களின் மகத்தான பங்களிப்பை அங்கீகரித்துள்ளதுடன், அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘Lanka Remit’ செயலியின் ஊடாக உயர் மாற்று விகிதங்கள் மற்றும் பிற மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் போன்ற நன்மைகள் மூலம் அவர்களை அங்கீகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.”

“பணம் அனுப்பும் துறையில் 40 வருட விரிவான வரலாற்றைக் கொண்ட ஒரு தனியார் துறை வங்கி என்ற வகையில், இலங்கைக்கு பணம் அனுப்புவதை முறைப்படுத்துவதிலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன்களை உறுதி செய்வதிலும் முன்னணியில் இருப்பதில் நாங்கள் சிறந்த நிலையில் இருக்கிறோம்.

புதிய செயலியின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இது முறையான பணம் அனுப்பும் வழிகளை வலுப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறோம்,” என HNBஇன் பிரதி பொது முகாமையாளர் சில்லறை மற்றும் SME வங்கிச் சேவைகள், சஞ்ஜேய் விஜேமான்ன கூறினார்.

மிக சமீபத்தில், HNB 10 அதிர்ஷ்ட வெற்றியாளர்களுக்கு தலா 100,000 ரூபா வீதம் வாராந்திர குலுக்கல் முறையில் வழங்குவதற்காக பணம் அனுப்பும் சீட்டிழுப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இந்த திட்டம் 2022 முழுவதும் தொடரும். வங்கியின் பணம் அனுப்பும் சேவையானது, ஒவ்வொரு மக்கள்தொகை கொண்ட கண்டத்திலும் உள்ள வங்கியின் உலகளாவிய பங்காளிகளின் வலைப்பின்னல் மூலம் நிதியை பரிமாற்றுவதற்கான வசதியையும் பாதுகாப்பையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. HNBஇன் உலகளாவிய வலையமைப்பு, உலகம் முழுவதும் உள்ள பல புகழ்பெற்ற பரிவர்த்தனை இல்லங்கள் மற்றும் வங்கிகளுடன் 130க்கும் மேற்பட்டவர்களுடன் கைக்கோர்த்துக் கொண்டுள்ளது.

இலங்கை ரூபாவைத் தவிர, பணம் அனுப்புபவர்கள் 13 நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களில் நிதிகளை வைப்பீடு செய்யலாம்.

அதன் உலகளாவிய வலையமைப்பை நிறைவு செய்யும் வகையில், வங்கியானது இலங்கையில் இருந்து வெளிநாட்டவர்களுக்கு அவர்களின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆதரவளிக்க மூலோபாய இடங்களில் பிரதிநிதிகளை நியமித்துள்ளது.

HNB பெறுநர்களுக்கு வெளிநாட்டுப் பணம் அனுப்புவதை வசதியாக அணுகுவதற்குப் பல பணப் பரிமாற்ற தேர்வுகளை வழங்குகிறது. நாடு முழுவதும் அமைந்துள்ள வாடிக்கையாளர் நிலையங்களில் பணத்தைப் பெறுவதற்கும், ATMகள் மூலம் பணம் எடுப்பதற்கும் வங்கி வசதி செய்து, அதன் சொந்த ATMகள் மூலம் 780க்கும் மேற்பட்ட ATMகள் மூலம் ‘கார்ட் இல்லாத பணம் மீளப் பெறும் வசதியைப்’ பயன்படுத்தி பணமாக்குகிறது. HNB பணம் அனுப்பும் செயட்பாட்டின் மூலம் பணத்தை உடனடியாக வேறு ஏதேனும் உள்ளூர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கிறது. தடையற்ற வங்கிச் சேவையை உறுதி செய்வதற்காக, ஆண்டு முழுவதும் 24×7 என்ற அடிப்படையில் பணம் அனுப்பும் பரிவர்த்தனைகளை வங்கி செயல்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதிலும் 256 வாடிக்கையாளர் நிலையங்களைக் கொண்டுள்ள HNB இலங்கையின் மிகப் பெரிய, தொழில்நுட்ப ரீதியாக புத்தாக்கமான வங்கிகளில் ஒன்றாகும். வங்கிச் சிறப்புக்கான அதன் நற்பெயரை ஒருங்கிணைத்து, சர்வதேச நிதி விருது வழங்கும் நிகழ்வு 2021இல் வங்கி பிரிவில் சிறந்த சில்லறை வங்கி மற்றும் சிறந்த SME வங்கி விருதுகளை HNB பெற்றது. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட புகழ்பெற்ற பேங்கர் இதழால் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக தொகுக்கப்பட்ட உலகின் சிறந்த 1,000 வங்கிகளின் பட்டியலில் வங்கியும் இடம் பெற்றுள்ளது. குளோபல் ஃபைனான்ஸ் விருதுகள் 2020இல் HNB இலங்கையின் சிறந்த துணைக் காப்பாளர் (Best Sub-Custodian) வங்கியாகவும் அறிவிக்கப்பட்டது. Fitch Ratings (Lanka) Ltdஇன் தேசிய மதிப்பீட்டை AA- (lka) HNB பெற்றுள்ளது.

Related Articles

Latest Articles