மருத்துவர்கள் சங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரணை செய்ய மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம்

நாட்டில் மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் விலை அதிகரிப்பு மக்களின் மனித உரிமை மீறல் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரணை செய்ய தீர்மானித்து சுகாதார அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக  மனித உரிமைகள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

குறித்த மனுவில் பிரதிவாதிகளாக சுகாதார செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபை ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டின் பொது சுகாதார சேவையும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன  தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles