கம்பளை வெலம்பொட கெட்டகும்புர பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கழிவு தேயிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கம்பளை அதிரடி படை முகாமுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அதிரடி படையினர் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
வெலம்பொட கெட்டகும்புர பிரதேசத்தில் சூட்சுமமான முறையில் கழிவு தேயிலையை மறைத்துவைத்திருந்த நிலையில், கம்பளை அதிரடி படையினர் சுற்றி வளைத்தனர்.
இதன்போது 2200 கிலோ கழிவு தேயிலை மீட்கப்பட்டுள்ளது. மேலும் கம்பளை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தேயிலையை பரிசோதனை செய்து அவ்விடத்திற்கு சீல் வைத்துள்ளனர்.
