‘மலையக பல்கலைக்கழகம்’ – அமைச்சர் ஜீவனிடம் சிவநேசன் விடுத்துள்ள கோரிக்கை

” மலையக பல்கலைக்கழகம் அமைப்பதற்கு ஹட்டனில் இயங்கும் சௌமிய மூர்த்தி தொண்டமான் பயிற்சி நிலையத்தினை தெரிவு செய்தால் ( TVTC ) பொருத்தமாக இருக்கும். அங்கு மேலதிக இட வசதியும் உள்ளது.”

இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா. சிவநேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அமைச்சர் ஜீவன் தொண்டமானின் முயற்சியில் மலையகத்தில் பல்கலைக்கழகம் மலர்வதை மனதார வரேற்கின்றோம். எனினும், பல்கலைக்கழகம் அமைவதற்கு தெரிவு செய்த இடமான கொட்டகலை ஆசிரியர் பயி்ற்சி கல்லூரி பொருத்தமான இடம் இல்லை. புதிய இடத்தினை தெரிவு செய்வதற்கு முயற்சி செய்யுங்கள், மலையகத்தில் ஆசிரியர் பயிற்சி கல்லூரி இருப்பது எமக்கு பெரிய வரபிரசாதமே.

இங்கு பல்கலைக்கழகம் அமைப்பதன் மூலம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி இல்லாமல் ஆக்கப்படுவதற்கான ஆபத்தும் காணப்படுகின்றது.
தற்போதைய அரசு பணம் இல்லாத காரணத்தை காட்டி அமைச்சரை திருப்திபடுத்த முயற்சி செய்கின்றது.

இதே அரசாங்கம் கொரோனா காலத்தில் இரத்தினபுரி பகுதியில் 300 கோடி பெறுமதியான கோட் காம்ளெக்ஸ் அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எமது சமுகத்திற்கு தனி பல்கலைக்கழகம் உருவாக்குவதில் இவர்களுக்கு உடன்பாடு கிடையாது என்பது இவர்களின் போக்கில் தெரிகின்றது.

கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் இடத்தை தெரிவு செய்யாமல் மலையகத்தில் ஹட்டனில் இயங்கும் சௌமிய மூர்த்தி தொண்டமான் பயிற்சி நிலையத்தினை தெரிவு செய்தால்( TVTC ) பொருத்தமாக இருக்கும். இங்கு சகல வசதிகளும் காணப்படுவதோடு எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்தை விரிவுபடுத்தப்பட கூடிய நில வசதிகளும் காணப்படுகின்றது.

அப்படி இல்லை என்றால் புதிய நிலத்தினை பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ளவும்.

நாம் ஒன்றை பெறுவதற்காக இன்னும் ஒன்றை இழக்க முடியாது. எனவே மலையகத்தில் உள்ள கல்விகற்றோர் சமுக ஆர்வலர்கள், புத்திஜீவிகள் அனைவரும் சேர்ந்து ஆசிரியர் பயிற்சி கல்லூரியை காப்பாற்றுவதோடு பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கும் ஆலோசனைகளை அமைச்சரிடம் முன்வைக்குமாறு கேட்டு கொள்கின்றேன் .” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles