மஹிந்தவின் பணத்தை கொள்யையடித்தது யார்? கசிந்தது தகவல்!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வங்கி கணக்கில் இருந்து மூன்றரை கோடி ரூபாயை மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்ததாகக் கூறப்படும் பிரதமருக்கு நெருக்கமான அதிகாரி பதவி நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் குறித்த வங்கிக் கணக்கின் தானியக்க பணப் பறிமாற்று அட்டையை பயன்படுத்தி இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ள பணத்தின் பெரும் பகுதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவருக்கு சம்பளமாக கிடைக்கப் பெற்ற பணத் தொகை எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

குறித்த வங்கிக் கணக்கில் பணம் குறைந்துள்ளமை தொடர்பில் தேடிப் பார்த்த போதே இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபர், முன்னாள் சபாநாயகர் ஒருவரின் மகனான மஹிந்த ராஜபக்சவுக்கு மிக நெருக்கமான, சில காலம் அவரது தனிப்பட்ட உதவியாளராக செயற்பட்டவர் எனவும் பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், பண மோசடி தொடர்பிலான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து, குறித்த நபர் , பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் பிரதமர் அலுவலகம் தொடர்பில் வகித்து வந்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles