மாநகர முதல்வராகிறார் அதாஉல்லா!

அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராக முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான அதாஉல்லா அஹமதுலெவ்வை மரைக்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தியோகபூர்வமான வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த 2025 உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து, நாடு முழுவதுமுள்ள நகராட்சி மன்றங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர்கள் மற்றும் பிரதி முதல்வர்களின் பெயர் களை தேர்தல் ஆணைக்கழு உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.

இதற்கமையவே அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராக முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா பெயரிடப்பட்டுள்ளார். இந்நிலையில்,பிரதி மேயராக உதுமாலெவ்வை உவைஸ் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles