மாமியாரை வெட்டிக்கொலை செய்த மருமகள்: கம்பளையில் பயங்கரம்

தனது மாமியாரை, மருமகளொருவரை வெட்டி கொலை செய்துள்ள கொடூர சம்பவமொன்று கம்பளை, எக்கால பொலிஸ் பிரிவுக்குட்பட்;ட உலப்பனை தோட்டத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

78 வயதான எஸ். சாம்பஜோதி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 32 வயதான மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருமகள், அவரின் இரு பிள்ளைகள் மற்றும் மாமியார் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையிலேயே நேற்றிரவு மருமகள், மாமியாரை வெட்டி கொலை செய்துள்ளார்.

வெட்டு காயங்களுக்கு இலக்கான மாமியார், கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின் சிகிச்சை பலன்யின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கம்பளை மற்றும் எக்கால பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Related Articles

Latest Articles