மொனராகலையிலிருந்து கொழும்பு பயணித்த இபோச பஸ் விபத்து

2026.08.11 இன்று அதிகாலை சுமார் 3.55 மணியளவில், மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மஹகொடயாய பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனமல்வில இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பேருந்து விபத்துக்குள்ளானதில், பேருந்தின் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பஸ்ஸில் 15 பயணிகள்வரை பயணித்திருந்தாலும் அதிஷ்டவசமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக சிரிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்குள்ளான பேருந்தின் பதிவு இலக்கம் NA 1097 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

த.டிமேஷன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles