மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை உடன் குறைக்குமாறு வலியுறுத்தியும் பசறையில் நேற்றிரவு தீப்பந்தம் ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியினரால் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வாழ்க்கை செலவு அதிகரிப்பு , மின்சார கட்டண உயர்வு, வரி அறவீடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றிரவு 7 மணியளவில், கொட்டும் மழைக்கு மத்தியிலும் தீப்பந்தம் ஏந்தி, பாதாதைகளை சுமந்தவாறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டம் மடுல்சீமை செல்லும் சந்தியில் ஆரம்பிக்கப்பட்டு நடைபவணியாக பரகொல்ல செல்லும் சந்தி வரை சென்று பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
ராமு தனராஜா
