மீண்டும் பொது வேட்பாளராக களமிறங்க தயார்! மைத்திரிக்கு வந்த ஆசை

” அரசியலில் நான் எதற்கும் தயாராகவே இருக்கின்றேன். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக நான் தயார்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் மைத்திரி மேலும் கூறியவை வருமாறு,

” ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தற்போது குழப்பம் இல்லை. அனைவரும் சகோதரர்கள்போல் செயற்பட்டுவருகின்றோம்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நான் பொதுவேட்பாளராக களமிறங்குவதற்கான சாத்தியம் உள்ளது. அதற்கான அழைப்பு விடுக்கப்பட்டால் நிச்சயம் ஏற்பேன்.

நான் ஜனாதிபதியாக பதவி வகித்தவன். சொல்லில் அல்ல செயலில் காட்டியவன். கடந்தகால தவறுகளையும் சரிசெய்துகொண்டு முன்னோக்கி செல்ல முடியும். நான் எதற்கும் தயார்.”  – என்றார்.

Related Articles

Latest Articles