மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் எனவும் நாளாந்தம் இரண்டு மணித்தியால மின்வெட்டு தொடர்ந்தும் அமுல்படுத்தப்படாவிட்டால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியாது போகும் என சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்தார்.
தொடர்ந்து மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டாலும் சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் கிடைக்காததால் மக்கள் வழமையான முறையில் மின்சாரத்தை பயன்படுத்த பழகி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.










