முடிவுக்கு வருமா ராஜிதவின் அரசியல்? சஜித் அணி விடுத்துள்ள எச்சரிக்கை!

” ராஜித சேனாரத்ன ஆளுங்கட்சி பக்கம் சென்றால், அத்துடன் அவரின் அரசியல் வாழ்வும் முடிந்துவிடும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜின சேனாரத்ன, ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் வகையில் ஆளுங்கட்சி பக்கம் தாவவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேராவிடம் வினவப்பட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

” இது தொடர்பில் ராஜிதவிடம் நானும் வினவினேன் ,அவர் இல்லை என சொன்னார். இருந்தாலும் போய்விடுவாரோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. அவ்வாறு சென்றால் அத்துடன் அவரின் அரசியல் வாழ்வு முடிந்துவிடும்.” – என்றார்.

Related Articles

Latest Articles