தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் இன்று நுவரெலியாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.
இதன்போதே முற்போக்கு கூட்டணியினருடன் பேச்சு நடத்தியுள்ளார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணி குழுவில் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம். உதயகுமார் மற்றும் பரணீதரன், ஆர், ராஜாராம், விஸ்வநாதன் ஆகியோரும், அமெரிக்கத் தூதுவர் குழுவில் ஜூலி சங்குடன் அரசியல்துறைப் பொறுப்பாளர் ரூபி, யூ.எஸ்.எயிட். துணைப் பணிப்பாளர் டிம் ஆகியோரும் சந்திப்பில் பங்கேற்றனர்.
இன்றிரவு இதொகா பிரமுகர்களுடன் அமெரிக்க தூதுவர் பேச்சு நடத்தவுள்ளார்.
