மூன்று பிள்ளைகளின் தந்தை மண்வெட்டியால் தாக்கிக் கொலை! லிந்துலையில் பயங்கரம்!!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஹா தோட்டத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

40 வயதுடைய வீரசாமி பெஞ்சமின் என்ற 3 பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவரது தாயுடன் நேற்றிரவு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, சத்தம் கேட்டு விசாரிக்க சென்ற அயல் வீட்டில் உள்ள ஒருவர் மண்வெட்டிப் பிடியால் அவரைத் தாக்கியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த நபர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

தக்குதலை நடத்திய பெரியசாமி விஜயகுமார் என்ற 27 வயதுடைய நபர் தலைமறைவான நிலையில், லிந்துலை நாகசேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கௌசல்யா

Related Articles

Latest Articles