இன்று மேலும் 113 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஐவர் அடங்குகின்றனர். ஏனைய 105 பேரும்குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களின் நெருங்கிய உறவினர்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி குறித்த பகுதியில் முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்.