தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஓலிறூட் பிரதேசத்தில் நீரில் மிதந்தவாறு ஆணின் சடலமொன்று 30 இன்று காலை 11 மணி அளவில் தலவாக்கலை பொலிசார் மீட்டுள்ளனர்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அப்படியதற்கு பொலீசார் விரைந்து சென்றுள்ளனர்.
சடலம் இதுவரை இனம் காணப்படவில்லை. இறந்தவரை சடலத்தை நீதிமன்ற அனுமதியோடு மீட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர் இது தொடர்பான விசாரணைகளை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.










