‘மைத்திரியை 08 ஆம் திகதி சந்திக்கிறார் கோட்டா’

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 08 ஆம் திகதி மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

அரசின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சரவையில் இருந்து ஜனாதிபதி வெளியேற்றியுள்ளார். எனினும், பங்காளிக்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்ற சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினருக்கு தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இச்சந்திப்பு இடம்பெறக்கூடும் என தெரியவருகின்றது. இதன்போது தமது தரப்பு கோரிக்கைகளையும் சுதந்திரக்கட்சி முன்வைக்கும்.

Related Articles

Latest Articles