நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவது தொடர்பில் கட்சி இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான காமினி லொக்குகே தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது குறித்து கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை. அதேபோல நாமல் ராஜபக்சவை வேட்பாளராக போட்டியிட வைப்பது பற்றியும் தீர்மானம் எடுக்கப்படவில்லை. எனினும், நாமல் ராஜபக்சவின் பங்களிப்புடன் கட்சியை கட்டியெழுப்பும் பணி இடம்பெறுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சி மட்டத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றுவருகின்றது. எனவே, உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும்.
அதேவேளை, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின்போது அவரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.
