யாழில் உள்ள ஆலயமொன்றில் யாகசம் பெறும் ஒருவர் அவ் ஆலய புனரமைப்பு பணிக்கு 2 லட்சம் ரூபா நிதி வழங்கியுள்ளார்.
யாழ். வண்ணை ஸ்ரீ வேங்கடவரதராஜப்பெருமாள் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக யாகாசம் பெறும் பாபுஜி என்ற நபரே ஆலய புனரமைப்புக்கு என குறித்த நிதியினை வழங்கியுள்ளார்.
இந்த விடயம் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
ஆலயத்தில் யாசகம் பெறும் பணத்தினை தனது உணவு செலவு போக ஏனையவற்றை சேமித்து வைத்தே ஆலய புனரமைப்புக்கு என சுமார் இரண்டு லட்சம் ரூபா பணத்தினை ஆலய நிர்வாகத்திடம் வழங்கியுள்ளார்.










