யாழில் முதியவர் படுகொலை: இருவருக்கு மரணதண்டனை!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியுள்ளது.

கொடிகாமம், மந்தைவெளிப் பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்தப் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய முதியவர் ஒருவர் கோடாரி மற்றும் பொல்லுகளால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் யாழ் . மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று வழக்குத் தீர்ப்புக்காகத் திகதியிடப்பட்டிருந்தது.

தீர்ப்புக்காக வழக்கு மன்றில் நீதிபதி டி.எஸ் சூசைதாஸ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, எதிரிகளான இருவரையும் மன்று நியாமான சந்தேகங்களுக்கு அப்பால் குற்றவாளிக்காகக் கண்டு இருவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது.

“ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படும் திகதியில் நிர்ணயிக்கப்படும் இடத்தில் குற்றவாளியின் உயிர் பிரியும் வரை தூக்கிலிடுமாறு இந்த மன்று பரிந்துரைக்கின்றது.” – என்று நீதிபதி தண்டனைத் தீர்ப்பளித்தார்.

Related Articles

Latest Articles