ரணில், சஜித் அணிகள் சங்கமம்: குட்டி சபைகளில் கூட்டு அரசு!

உள்ளுராட்சி சபைகளில் எதிரணிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியினர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கிடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதன்போதே உள்ளுராட்சிசபைத் தேர்தலில் எதிரணிகள் பெரும்பான்மை பெற்றுள்ள சபைகளில், ஆட்சியமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இரு கட்சிகளும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன என்று இரு கட்சிகளின் செயலாளர்களின் கையொப்பத்துடன் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய கட்சிகளுடனும் இது சம்பந்தமாக பேச்சு நடத்தி இணக்கப்பாட்டை எட்டுவதற்கு இரு கட்சிகளும் உத்தேசித்துள்ளன.

 

Related Articles

Latest Articles