எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் பேச்சு நடத்துவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்கான தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில் இன்று கூடியது.
இதன்போது பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் கலந்துரையாடல்களை நடாத்தி, தமிழர் பிரச்சினை தீர்வுக்காக வேட்பாளர்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டின் அடிப்படையில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் இறுதி முடிவெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பதா? இல்லையா? என்பது இன்று தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை.
எனினும், கட்சியின் அனுமதியின்றி பொது வேட்பாளராக களமிறங்க இணக்கம் தெரிவித்தமை குறித்து, தமிழரசுக் கட்சி உறுப்பினரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரனிடம் விளக்கம் கோரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
