ரிஷாட்டின் மனைவியும், புரோக்கர் பொன்னையாவும் கைது!

ரிஷாட் பதியுதீனின் மனைவி ஆயிஷா (வயது 46) மற்றும் அவரின் தந்தை மொஹமட் ஷெஹாப்தீன் (வயது 70) ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியை வேலைக்கு அமர்த்திய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே கைது இடம்பெற்றுள்ளது.

அத்துடன், டயகம பகுதியிலிருந்து சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த தரகர் பொன்னையாவும் (வயது – 64) கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் டயகம பகுதியைச் சேர்ந்த ஹிஷாலினி என்ற சிறுமி சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles