லக்னோவிடம் வீழ்ந்தது சிஎஸ்கே!

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 59 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.

லக்னோவின் ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற லக்னோ அணி தலைவர் ரிஷப் பண்ட் , முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதற்கமைய களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தனர்.

20 ஓவர்களில் சென்னை அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்களைப் பெற்றது. லக்னோ தரப்பில் ஆகாஷ் சிங் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

188 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணிக்கு மிட்செல் மார்ஷ் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஜோடி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது.

மிட்செல் மார்ஷ், சிஎஸ்கே பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் 38 பந்துகளில் 90 ஓட்டங்களைப் பெற்றார்.
16.4 ஓவர்களிலேயே லக்னோ அணி வெற்றி இலக்கை அடைந்தது.

இந்தத் தோல்வியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

play-off சுற்றுக்குத் தகுதி பெற அடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்குச் சென்னை தள்ளப்பட்டுள்ளது.

லக்னோ அணி இந்தப் பெரிய வெற்றியின் மூலம் தனது play-off கனவைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

Related Articles

Latest Articles