லாஃப் சிலிண்டர் விநியோகம்-லாஃப் வெளியிட்ட தகவல்

சில மாதங்களுக்கு பின்னர் எரிவாயுவை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு இன்று எரிவாயு பகிரப்படும் என லாஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும் தங்களது வர்த்தக நிலையத்திற்கு எரிவாயு கிடைக்கும் வரையில் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

லாஃப் நிறுவனத்துக்கான எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று நேற்று நாட்டை வந்தடைந்தது.

குறித்த கப்பலில் 3,500 மெட்ரிக் எரிவாயு கொண்டு வரப்பட்டுள்ளதாக லாஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை மறுதினம் முதல் சமையல் எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles