நாட்டில் இன்று (13) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு விலையை லாப் கேஸ் (LAUGFS Gas) நிறுவனம் அதிகரித்துள்ளது.
இதற்கமைய இதுவரை 4,965 ரூபாவாகக் காணப்பட்ட 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 1,775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 6,740 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 1,988 ரூபாவாகக் காணப்பட்ட 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 732 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 2,720 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கான செலவு அதிகரித்துள்ளமையைக் கருத்திற்கொண்டு இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக LAUGFS Gas நிறுவனம் அறிவித்துள்ளது.










