இலங்கையில் 12.5 கிலோகிராம் நிறை கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 300 முதல் 400 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் அதிகரிக்க உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விலைத்திருத்தம் இந்த வார இறுதியில் மேற்கொள்ளப்படும் என அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.
சமையல் எரிவாயு விலை சூத்திரத்திற்கமைய, 12.5 கிலோகிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 700 முதல் 800 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் அதிகரிக்கப்பட வேண்டும்.
இருப்பினும், அதிக விலையால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் நோக்கில் 300 முதல் 400 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தையில் தற்போது, 12.5 கிலோகிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4,409 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்படத்தக்கது.










