பாலி பல்கலைக்கழக மாணவர் பிக்குகள் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று நேற்று (23) கல்வி அமைச்சுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டோர் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
சந்தேகநபர்கள் இன்று (24) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
