வரிசைகளில் காத்திருக்க வேண்டாம், 6 ஆம் திகதி வரை எரிவாயு விநியோகம் இல்லை- லிட்ரோ

நாட்டில் எதிர்வரும் ஜுலை மாதம் 6ஆம் திகதி வரை சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே, எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என பொதுமக்களை லிட்ரோ நிறுவனம் கோரியுள்ளது.

எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இரண்டு கப்பல்களில் 7,00 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டை வந்தடையவுள்ளது.

அந்த கப்பல்களில் உள்ள எரிவாயு கிடைக்கும் வரை கையிருப்பில் போதியளவு எரிவாயு இல்லை என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles