வலிசுமந்த வாழ்க்கை வாழும் ஹோப் தோட்ட மக்கள்!

தோட்டப் பகுதியிலுள்ள வைத்திய சேவைகள் இன்றும் சீராக கிடைப்பதில்லை என்ற உண்மை நிலையை யாரும் ஏற்றுக் கொள்ளவதில்லை. குறிப்பிட்ட சில பகுதிகளில் இருக்கும் வைத்திய வசதிகளை ஊடகங்களில் செய்திகளாகவும் நிறைவான சேவை கிடைப்பதாக பார்ப்பவர்களை நம்ப வைக்கும் கைகரியங்களே இன்று அதிகமாக நடக்கிறது.

இன்று சிங்கள குக்கிராமங்களில் இருக்கும் வைத்திய சேவை நுவரெலியா போன்ற நகரத்தை அண்டிய தோட்ட பகுதிகளுக்கு கிடைப்பதில்லை.ஆனால் இவற்றை உணர்ந்து சேவைகளை செய்ய கூடிய அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் இல்லாத சூழ்நிலையிலேயே எமது மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அதை அம்போன்னு விட்டு விட்டாலாம்.

ஆனால் இவ்வாறான பிரச்சினைகளை உணர்வுபூர்மாக உணர்ந்து கொள்ள கூடிய புதிய தலைமுறை தலைவர்களை தோட்ட மக்கள் கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையும் போய் விட்டது.

நுவரெலியா மாவட்டம் ஹங்குராங்கெத்த பிரதேசத்திக்குட்பட்ட ஹேவாஹெட்ட ஹோப் தோட்டம் நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் தோட்டங்களில அதிகஷ்ட பிரதேசமாகும்.இங்கு நான்கு தோட்டப்பிரிவுகள் காணப்படுகின்றன. ஹோப் கீழ்பிரிவு, ஹோப் மேல்பிரிவு , ஹோப் மத்திய பிரதேசம், பட்டர் மாலை ஆகிய பிரதேசங்களாகும்.

இத் தோட்டத்தில் சுமார் நாநூறு தொழிலாளர் குடும்பங்கள் வாழ்கின்றன. இங்கு போக்குவரத்து வசதிகள் கூட இல்லை. இத்தோட்டத்திக்கு பஸ் சேவை ஒன்று இருந்தது. ஆனால் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இந்த பஸ்சேவை பாதை சேதமடைந்துள்ளதை காரணம் காட்டி பஸ்சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளது.இது அரசு நிர்வகிக்கும் ஜனவசம தோட்டம், குறைந்த வருமானம் கொண்டதாகும்.

இத்தோட்டம் அதிகஷ்ட பிரதேசம் என்பதை உணர்ந்த ஆங்கிலேயர் இத்தோட்டத்திக்கு என தனியான வைத்தியசாலை ஒன்றை அமைத்திருந்தனர்.

இவ் வைத்தியசாலை சிறப்பான வைத்திய சேவைகளை நீண்ட காலமாக வழங்கி வந்துள்ளது.

இன்று இந்த வைத்தியசாலை வைத்தி சேவைகளை வழங்க முடியாத நிலையில் மூடப்பட்டுள்ளது. நாற்பதுக்கும் அதிகமாக கட்டில்களை கொண்ட வைத்தியசாலையாகும்.

ஆண்கள் வாட்டில் பத்து கட்டிலும். பெண்கள் வாட்டில் பத்து கட்டிலும் சிறுவர் வாட்டில் பத்து கட்டிலும் பிரசவ வாட்டில் பத்து கட்டில்களும் காணப்படுகின்றன.

இன்று இந்த வாட்டுகள் மூடப்பட்டு உள்ளத்துடன் தளபாடங்கள் பராமரிப்பின்றி தேசமடைந்துள்ளன.
இப்போது இந்த வைத்தியசாலையில் ஓய்வு பெற்ற 65 (வயது) (E.M.O) எனப்படும் தோட்ட மருத்துவர் ஒருவர் மட்டுமே உள்ளார்

இவர் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டுமே இங்கு தங்குவார்.தடிம்மல், இருமல், சிறு காயங்களுக்கு மட்டுமே மருந்துகள் வழங்கப்படுகின்றன. இவையே இன்று இந்த வைத்திய சாலை மூலமாக மக்களுக்கு கிடைக்கும் அதிகபட்ச சேவையாகும்.

வைத்தியர் விடுதி, தாதியர் விடுதி, மருந்தகம், செயலாளர் வாட் என்பவற்றுக்கு தனித்தனி கட்டடங்கள் உள்ளன.

கடந்த சிலமாதங்களாக நடை பெற்ற தாய், சேய் கிளினிக் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.அதற்கான காரணங்கள் ஆயிரம் இருப்பதாக தோட்ட மக்கள் புலம்புகின்றனர். இதனால் தாய், சேய் கிளினிக்குக்கு இரண்டு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தாரோயா என்ற இடத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. அங்கு செல்வதற்கு போக்குவரத்து சேவையும் இல்லை.இந்த பாதையும் நீண்ட காலமாக சேதமடைந்துள்ளது.

கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சைகளுக்கு 02 கிலோ மீட்டர் நடந்து அல்லது தனியார் வாகனங்களில் அதிக பணம் செலவழித்து செல்ல வேண்டிய அவல நிலைக்கு இம் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.தோட்டத்தில் வேலை செய்யும் இவர்கள் போதிய வருமானம் இன்றி மேலும் வறுமைக்குள் தள்ளப்படுகின்றனர்.இந்த தோட்டத்தில் அம்பியூலன்ஸ் வசதிகளும் இல்லை.

தோட்டத்தில் நோயாளிகளை எடுத்து செல்ல தோட்ட நிர்வாகத்தில் வழங்கும் வாகள நடை முறையும் தற்போது இல்லை.கடந்த பதினைந்து வருடங்களாக திட்டமிட்டு படிப்படியாக இந்த வைத்தியசாலை மூடப்பட்டதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆங்கிலேயர் எமது மக்கள் நலன் கருதி செய்து வந்த சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.தோட்ட நிர்வாகத்தின் அசமந்தமும் தொழிலாளர்களின் நலனில் அக்கறை இன்மையின்

வெளிப்பாடே இவ்வாறான செயற்பாடுகளுக்கு மூல காரணமாகும்.உடல் உழைப்பை சுரண்டும் நிர்வாகம் தொழிலாளர் நலனில் அக்கறை கொள்ளவதில்லை.

இந்த வைத்தியசாலையை அரசு பொறுப்பேற்று புனரமைத்து மீண்டும் தொழிலாளர் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க வேண்டும் என இத் தோட்ட மக்கள் தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றனர்.

தாய், சேய் கிளினிக் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கானகாரணங்கள் ஆயிரம் இருப்பதாக தோட்ட மக்கள்புலம்புகின்றனர்.இதனால் தாய், சேய் கிளினிக்குக்கு 2 கிலோமீட்டருக்குஅப்பால் உள்ள தாரோயா என்ற இடத்துக்கு செல்ல வேண்டியுள்ளது.அங்கு செல்வதற்கு போக்குவரத்து சேவையும் இல்லை. இந்த பாதையும் நீண்ட காலமாகசேதமடைந்துள்ளது. கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும்குழந்தைகளுக்கான சிகிச்சைகளுக்கு 02 கிலோ மீட்டர் நடந்து அல்லது தனியார்வாகனங்களில் அதிக பணம் செலவழித்து செல்ல வேண்டிய அவல நிலைக்கு இம் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தோட்டத்தில் நோயாளிகளை எடுத்து செல்ல தோட்ட நிர்வாகத்தில் வழங்கும் வாகள நடை முறையும் தற்போது இல்லை. கடந்த 15 வருடங்களாக திட்டமிட்டு படிப்படியாக இந்த வைத்தியசாலை மூடப்பட்டதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆர். நவராஜா – தெல்தோட்டை

நன்றி – தினகரன்

Related Articles

Latest Articles