கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வெதமுல்லயிலிருந்து, கெமிலிதன் பிரதேசத்திற்கு மரக்கறி ஏற்றுவதற்காக பயணித்த லொறியொன்றை வழியில் நிறுத்திவிட்டு , இறங்கிய சாரதி – லொறி டயருக்கு கல் ஒன்றை வைக்க முற்பட்ட போது குறித்த லொறி பின்நகர்ந்து சாரதி மீது ஏறியுள்ளது.
இதனை தொடர்ந்து லொறியின் சாரதியை பிரதேச மக்கள் உடனடியாக அருகிலுள்ள தோட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இருப்பினும் சிகிச்சைக்காக கொண்டு சென்ற சாரதி உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர், தற்போது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான விசாரனைகளை கொத்மலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கௌசல்யா