விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களிலும் மழை பெய்துவருகின்றது. நோட்டன் பகுதியில் கடும் மழை பதிவானதால் நோட்டன்பிரிஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளிலும் நீர் வான் பாய்ந்து வருவதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியிலாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், காசல்ரி, கெனியோன், லக்ஸபான நவலக்ஸபான, பொல்பிட்டடிய. மவுசாக்கலை, மேல்கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் நீர் மட்டமும் வான்பாயும் அளவினை எட்டியுள்ளன. எவ்வேளையிலும் வான் கதவுகள் தன்னிச்சியாக திறக்கப்படலாம் என்பதனால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles