உள்ளாட்சிமன்ற தேர்தலில் வென்னப்புவ பிரதேச சபைக்கு போட்டியிடுவதற்காக தயாரிக்கப்பட்ட வேட்பு மனு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவின் மதில் மீது வைத்துவிட்டு மறந்து போனதால், இறுதி தினத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வென்னப்புவ பிரதேச சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் இம்முறை கிடைக்கவில்லை.
வேட்பு மனுக்கள் பொறுப்பேற்கும் இறுதித் தினமான 21 ஆம் திகதி, வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய புத்தளம் மாவட்ட செயலகத்துக்கு அருகில் வென்னப்புவ தொகுதி அமைப்பாளர் சரத் பரன்பொல வருகை தந்தபோது, வேட்பு மனு ஐ.தே.க தலைமையகத்தில் வைத்து விட்டு வந்தது தெரியவந்தது.
