ஹட்டன் கல்வி வலயத்திலிருந்து 990 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி ஹட்டன் கல்வி வலயத்திலிருந்து 990 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக வலயக்கல்விப் பணிப்பாளர். பி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

ஹட்டன் கல்வி வலயத்தின் உயர்தர பெறுபேறுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள் தொடர்பான வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அண்மையில் வெளியிட்டிருந்தது.

இந்த வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் ஹட்டன் கல்வி வலயத்தில் 1 ஏபி,1 சி 38 தமிழ் , சிங்கள பாடசாலைகளிலிருந்து 990 மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர்.

இதில் தமிழ் மொழி மூலம் 715 மாணவர்களும் சிங்கள மொழி மூலம் 275 மாணவர்களும் தெரிவாகியுள்ளனர்.

இதில் உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் தமிழ் மூலம் 60 மாணவர்களும் சிங்கள மொழிமூலம் 20 மாணவர்களும் பௌதீக விஞ்ஞானப்பிரிவில் தமிழ் மூலம் 40 சிங்கள மொழிமூலம் 20, வர்த்தக பிரிவில் தமிழ் மொழி மூலம் 150 சிங்களம் 60 மாணவர்களும்,

கலைத்துறையில் தமிழ் மொழி மூலம் 400 மாணவர்களும் சிங்கள மொழி மூலம் 120 மாணவர்களுமாக தொழில்நுட்ப பாடங்களில் தமிழ் மொழிமூலம் 65 பேரும் சிங்கள மொழி மூலம் 55 பேருமாக 990 பேர் தெரிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles