ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இதல்கஸ்ஹின்ன பகுதியில் ரயில் பாதையில் நடந்து சென்ற 50 வயதுடைய நபரொருவர், கொழும்பில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டுயிருந்ந ரயிலில் மோதி பலியாகியுள்ளார்.
குறித்த நபர் உடுபில்தன்ன இதல்கஸ்ஹின்ன பகுதியைச் சேர்ந்தவர் என
ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
சடலம் தற்போது தியத்தலாவ வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது
மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
