பசறை பொலிஸ் விஷேட பிரிவினருக்கு, ஆட்டோவில் ஹெரோயின் போதைப் பொருள் கொண்டு செல்லப்படுகின்றது என இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து குறித்த ஆட்டோவை பின்தொடர்ந்து சென்ற பசறை விஷேட பொலிஸ் பிரிவினர் , பதுளை பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினருக்கு தகவலை வழங்கி , அவர்களை வரவழைத்து பதுளை பசறை பிரதான வீதியில் வெவெஸ்த்த 7 ம் கட்டை பகுதியில் வைத்து ஆட்டோவை சோதனைக்கு உட்படுத்தினர்.
இதன்போது ஆட்டோவில் இருந்த நபரிடம் 6380 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் 39 வயதுடைய பதுளபிட்டி பகுதியை சேர்ந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் பதுளை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜ்










