IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 3-வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
இரு அணிகளுமே தலா 14 புள்ளிகளை பெற்றுள்ளன. எனினும் நிகர ரன் ரேட் அடிப்படையில் ஹைதராபாத் அணி 2-வது இடத்தில் உள்ளது.
கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தொடர்ச்சியாக 4 வெற்றிகளை குவித்ததன் மூலம் தற்போது புள்ளிகள் பட்டியலில் வலுவான நிலையில் உள்ளது.
கடைசியாக அந்த அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.
பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.










