மஸ்கெலியா புளூம்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயத்தில் தொழில்நுட்பக் கூடம், ஆசிரியர் விடுதி திறப்பு

மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் புளூம்பீல்ட் பிரிவில் அமைந்துள்ள புளூம்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்பக் கூடமும் , இருமாடி ஆசிரியர் விடுதியும் இன்று (12) திறக்கப்பட்டன.

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரஆரச்சி மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோரால் இவை திறந்து வைக்கப்பட்டன.

இதற்காக தற்போதைய அரசாங்கத்தினால் 52 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

தேசிய பாடசாலைகளில் உள்ள அனைத்து வசதிகளையும் தோட்டப்புறப் பாடசாலைகளுக்கும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரஆரச்சி இதன்போது தெரிவித்தார்.

Related Articles

Latest Articles