182 சுற்றிவளைப்புகள்: 758-க்கும் மேற்பட்ட தரமற்ற தலைக்கவசங்கள் பறிமுதல்

 

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் பயணிப்பவர்களின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், SLS 517 தரநிலைக்கு உரிய SLS தரச்சான்றிதழ் இலச்சினை இல்லாத மோட்டார் சைக்கிள் பாதுகாப்புத் தலைக்கவசங்கள் தொடர்பாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் 2026 ஒக்டோபர் 06 ஆம் திகதி முதல் நாடளாவிய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த விசேட நடவடிக்கையின் கீழ் 21 மாவட்டங்களில் 84 வெற்றிகரமான சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதுடன், SLS தரச்சான்றிதழ் இலச்சினை இல்லாத குறைந்தது 327 தலைக்கவசங்கள் வழக்குப் பொருட்களாக அதிகாரசபையின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.

பல்வேறு வர்த்தகப் பெயர்களில் விற்பனை செய்யப்பட்ட SLS இலச்சினை இல்லாத தலைக்கவசங்கள் பல மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளன.

குறிப்பாக, ஒரே அல்லது ஒத்த வர்த்தகப் பெயர்களைக் கொண்ட தலைக்கவசங்கள் பல மாவட்டங்களில் மீண்டும் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், சில்லறை விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் மாத்திரம் நின்றுவிடாமல், விநியோகஸ்தர்கள், மொத்த விநியோகஸ்தர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் வரையிலான விநியோகச் சங்கிலி தொடர்பாகவும் விசாரணைகள் விரிவுபடுத்தப்படுகின்றன.

⚠️ SLS ஸ்டிக்கர்கள் மற்றும் சிறுவர்களுக்கான தலைக்கவசங்கள் தொடர்பிலும் விசாரணைகள்
கம்பஹா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் SLS ஸ்டிக்கர்களின் பயன்பாடு தொடர்பான தகவல்கள் பதிவாகியுள்ளதுடன், அவை தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், சிறுவர்களுக்கான மற்றும் சிறிய அளவிலான தலைக்கவசங்களிலும் SLS இலச்சினை இல்லாத பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறான தலைக்கவசங்கள் மோட்டார் சைக்கிள் அல்லது ஏனைய வாகனப் பயனர்களுக்கான பாதுகாப்புத் தலைக்கவசங்களாக விற்பனை செய்யப்படுமானால், அவையும் SLS 517 தரநிலைக்கு அமைவாகப் பரிசோதிக்கப்படும்.

முறையான கொள்வனவு ஆவ
ணங்கள் இன்றியும், உற்பத்தியாளர் அல்லது விநியோகஸ்தரை அடையாளம் காண முடியாத வகையிலும் தலைக்கவசங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள சந்தர்ப்பங்களும் கண்டறியப்பட்டுள்ளதால், அவை தொடர்பிலும் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

📊 2026 ஆம் ஆண்டின் விசேட தலைக்கவச சுற்றிவளைப்புகளின் மொத்த முன்னேற்றம்
2026 ஜூலை 27 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தலைக்கவச சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 98 வெற்றிகரமான சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு, SLS இலச்சினை இல்லாத 431க்கும் மேற்பட்ட தலைக்கவசங்கள் அதிகாரசபையின் பொறுப்பில் எடுக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, ஜூலை மற்றும் ஒக்டோபர் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு விசேட நடவடிக்கைகளின் மொத்த முன்னேற்றம்:

✅ வெற்றிகரமான சுற்றிவளைப்புகள் – 182
✅ அதிகாரசபையின் பொறுப்பில் எடுக்கப்பட்ட தலைக்கவசங்கள் – 758க்கும் மேற்பட்டவை
இந்த எண்ணிக்கைகள் குறித்த இரண்டு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது வர்த்தக நிலையங்களிலிருந்து பொறுப்பேற்கப்பட்ட தலைக்கவசங்களை மட்டுமே குறிக்கின்றன.

⚖️ உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்!
செல்லுபடியாகும் SLS தரச்சான்றிதழ் அனுமதிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் பாதுகாப்புத் தலைக்கவசங்களை உற்பத்தி செய்ய வேண்டாம் என அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் வலியுறுத்தப்படுகிறது.

இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள், நடமாடும் விற்பனையாளர்கள், இணையவழி விற்பனையாளர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து வர்த்தகத் தரப்பினரும் SLS தரச்சான்றிதழ் இலச்சினை இல்லாத மோட்டார் சைக்கிள் பாதுகாப்புத் தலைக்கவசங்களை களஞ்சியப்படுத்துதல், காட்சிப்படுத்துதல், விற்பனை செய்தல் அல்லது விற்பனைக்காக வழங்குதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

தலைக்கவச சந்தை தொடர்பான கண்காணிப்புகள் மற்றும் விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதுடன், முன்னறிவிப்பின்றியும் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும்.

நுகர்வோருக்கான முக்கிய செய்தி!

தலைக்கவசம் என்பது பொலிஸ் சோதனையிலிருந்து தப்பிப்பதற்காக மாத்திரம் அணியப்படும் பொருள் அல்ல.
விபத்தின்போது தலையில் ஏற்படக்கூடிய கடுமையான காயங்களைக் குறைத்து, உயிரைப் பாதுகாக்க உதவும் அத்தியாவசிய பாதுகாப்பு உபகரணமாகும்.

குறைந்த விலையை மட்டும் கருத்தில் கொண்டு SLS தரச்சான்றிதழ் இலச்சினை இல்லாத தலைக்கவசங்களை வாங்க வேண்டாம்.

🏍️ தலைக்கவசம் வாங்குவதற்கு முன் SLS தரச்சான்றிதழ் இலச்சினையைச் சரிபார்க்கவும். அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளவும். முறையான பற்றுச்சீட்டைப் பெற்று பாதுகாப்பாக வைத்திருக்கவும்.

📞 உங்களுக்குத் தெரிந்த தகவல்களை எங்களுக்குத் தெரிவியுங்கள்!

SLS இலச்சினை இல்லாத தலைக்கவசங்களை உற்பத்தி செய்யும், விநியோகிக்கும் அல்லது விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை அலுவலக நேரங்களில் 1977 என்ற குறுந்தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்குத் தெரிவிக்கவும்.

உங்கள் பாதுகாப்பிற்காக தரமான தலைக்கவசத்தைத் தெரிவுசெய்யுங்கள். உங்கள் உயிர் விலைமதிப்பற்றது!

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles