பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க , லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையான அவரிடம் 3 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னரே கைது இடம்பெற்றுள்ளது.
முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட 03 நிறுவனங்களுக்கு பாஸ்பேட் ஏற்றுமதி செய்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை, லஞ்சம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் இடம்பெற்று வந்த விசாரணைகளின் அடிப்படையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.
அரசியல் களத்திலும், நாடாளுமன்றத்திலும் சாமர சம்பத் தஸநாயக்க, சாதாரண சிங்கள மொழி நடையில் உரையாற்றுவார். அவ்வப்போது தமிழிலும் சில வனங்களைக் குறிப்பிடுவார். அவர் இவ்வாறு குறிப்பிட்ட “இப்ப நல்லமா” என்ற தமிழ் வசனம் மூலம் முன்பு சமூகவலைத்தளங்களில் வைரலாகி இருந்தார்.










