08 ஆம் திகதி பஸிலின் ஆட்டம் ஆரம்பம்! தேர்தல் ஆணைக்குழு நாளை கூடுகிறது!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச நாளை மறுதினம் 08 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். இந்தத் தகவலை மொட்டுகட்சி உறுப்பினர் ஒருவர் ‘மலையக குருவி’யிடம் உறுதிப்படுத்தினார்.

பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக, மொட்டு கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இன்று எம்.பி.பதவியை துறந்தார். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு பஸில் ராஜபக்சவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தல் ஆணைக்குழு நாளை காலை கூடுகின்றது. அதன்பின்னர் பஸிலின் பெயர் வர்த்தமானியில் வெளியாகும்.

Related Articles

Latest Articles