மண்சரிவு இடரால் பாதிப்புற்று ஏறக்குறைய இரண்டு வருட காலமாக தேயிலை தொழிற்சாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள 51 குடும்பங்களுக்கு நிரந்தரமான வீடுகளை வழங்கும் கருத்திட்டத்தின் ஊடாக, 10 பேர்ச்சஸ் காணியுடன் வீடமைப்புத் திட்டத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று முன்தினம் (15) பூனாகலை – கபரகலை தோட்டத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பெருந்தோட்ட
உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, ஊவா மாகாண சபை ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பாராளுமன்ற உறுப்பினர்களான கிட்ணன் செல்வராஜ், ரவீந்திர பண்டார மற்றும் அம்பிகா செமுவேல், இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொத்ரிகோ, தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, அமைச்சின் மேலதிகச் செயலாளர் தீப்தி குணசேகர, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் காமிணி, பதுளை மாவட்ட மேலதிக செயலாளர், ஹல்தும்முல்ல பிரதேச செயலாளர், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, 10 பேர்ச்சஸ் காணியுடன் 28 இலட்சம் பெறுமதியான முழுமையான வீடொன்றையும் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வீடமைப்பு கருத்திட்டத்திற்கான நிதி பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை இராணுவத்தின் உழைப்பு பங்களிப்பு மூலமாக கட்டுமானப் பணிக்கான விசேட அனுசரணையும் வழங்கப்பட்டுள்ளது.