10 ஆண்டுகள் தலைவராக இருந்த மஹிந்தவுக்கு சு.க. மாநாட்டுக்கு அழைப்பு இல்லை!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டுக்கு அக்கட்சியின் முன்னாள் தலைவரான மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை .

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இந்த தகவலை தற்போதைய கட்சி தலைவரான மைத்திரிபால சிறிசேன உறுதிப்படுத்தினார்.

சுதந்திரக் கட்சியின் 72ஆவது ஆண்டுவிழா கொழும்பில் இன்று நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரும் கட்சி தலைமை பதவியை வகித்தவர்.

எனினும், 2005 முதல் 2015வரை சுதந்திரக்கட்சிக்கு தலைமை வழங்கிய மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை.

மஹிந்த ராஜபக்ச ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக தற்போது செயற்படுகின்றார்.

Related Articles

Latest Articles