10 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று(19)  இரவு 10.00 மணி முதல் நாளை (20) காலை 08.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.

கோட்டை மற்றும் கடுவெல நகரசபை பகுதிகளுக்கும் மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகரசபை பகுதிகளுக்கும் நீர் விநியோகம் தடைப்படும்.

அத்துடன் கொழும்பு 04, 05, 07 மற்றும் 08 ஆகிய இடங்களுக்கு இதே காலப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்படும்.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles