1,000 பாடசாலைகளுக்கு இணையத்தள வசதிகள்

ஆயிரம் பாடசாலைகளுக்கு இணைய தள வசதிகளை பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

100 கோடி ரூபா செலவில் இந்த செயற் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் நாடளாவிய ரீதியில் தற்போது நடைமுறையில் உள்ள 100 கல்வி வலயங்களை 120 வலயங்களாக அதிகரிப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கல்வியமைச்சில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே கல்வியமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த வகையில் கல்வி வலயங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்பட்சத்தில் தற்போது நிலவும் ஆசிரியர்களின் நிர்வாக சிக்கல்களுக்கு இலகுவாக தீர்வு காண முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயிரம் பாடசாலைகளுக்கு இணையதள வசதிகளை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகள் அடுத்த பாடசாலை தவணையின் போது ஆரம்பிக்கப்பட வுள்ளதுடன் கல்வித்துறையை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத் திட்டத்தின் கீழ் இந்த செயற்பாடுகள் நடைபெறவுள்ளன.

Related Articles

Latest Articles