11 மாதங்களுக்குள் 2 தொன் போதைப்பொருள் கைப்பற்றல்!

2022 ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் 7 ஆம் திகதி வரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது சுமார் 2 தொன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் ,39 ஆயிரத்து 671 சுற்றிவளைப்புகளின்போது 39 ஆயிரத்து 428 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மற்றும் இலங்கை கடற்படையினர் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களில் பெருமளவு ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

இக்காலப்பகுதிக்குள் கொக்கெய்ன் 370 கிலோ
106 கிராமும் , ஐஸ் போதைப் பொருள் 103 கிலோ 555 கிராமும், ஹசீஸ் போதைப் பொருள் 38 கிலோ 194கிராமும் கைப்பற்றப்பட்டதாக போதை வஸ்து ஒழிப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Latest Articles