11 பேருக்கு கொரோனா -மத்துகமவில் 3 கிராமங்கள் ‘லொக்டவுன்’!

மத்துகம பிரதேச செயலாளர் பிரிவில் மூன்று கிராமங்கள் இன்று (18) மாலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ஓவிடிகல, மதுகம மற்றும் மதுகம புதிய கொலணி ஆகிய கிராமங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

மேற்படி கிராமங்களை அண்மித்த பகுதியில் இதுவரையில் 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை, குருணாகலை, குளியாப்பிட்டிய பகுதியிலும் நான்கு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles