இலங்கையில் இவ்வருடத்தில் முதல் இரு மாதங்களுக்குள் 12 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
எனவே, கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மாத்தறை, காலி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவிவருகின்றது.
ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் 12 ஆயிரத்து 165 டெங்கு நோயாளர்கள் பதிவாகிள்ளனர்.










