“13 ஐ முழுமையாக அமுல்படுத்துங்கள்” – டில்லியின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார் ஜெய்சங்கர்!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கையிடம், இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று முற்பகல் சந்தித்து பேச்சு நடத்தினார். ஜனாதிபதி அலுவலகத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார ரீதியிலான உறவுகள் பற்றியும், தற்போதைய நிலைவரம் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியா வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பு கடிதத்தையும் ஜெய்சங்கர் கையளித்தார்.

அதன்பின்னர் இலங்கை வெளிவிவகார அமைச்சரும், இந்திய வெளிவிவகார அமைச்சரும் இணைந்து கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினர்.

இதன்போது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதியிடம் எடுத்துரைக்கப்பட்டது என இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார். மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்துவத்தையும் அவர் இடித்துரைத்தார்.

Related Articles

Latest Articles